fbpx
Others

சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திரபாபு நாயுடு கைது ஏன்…? விவரம்…

  • ந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, இன்னும் ஏழு மாதங்களில் ஐந்தாண்டுக் காலத்தை நிறைவுசெய்யப்போகிறது.  இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் அரசியல் களம் பரபரப்படைந்திருக்கிறது.

 ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி 2014 முதல் 2019 வரை நடைபெற்றது. அப்போது, ரூ.550 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம்ஒன்றுதொடங்கப்பட்டது. அதில், ரூ.371 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டிகுற்றம்சாட்டினார்.அந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டசந்திரபாபு நாயுடு, சி.ஐ.டி போலீஸாரால் கடந்த சனிக்கிழமை (செப். 9) அதிகாலையில் திடீரென்று கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில்அவர்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்..2024-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தொடருவோம் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறிவரும் நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டுவந்தார் சந்திரபாபு நாயுடு.அவருக்குமாநிலபோலீஸார்பல்வேறுஇடையூறுகளைஏற்படுத்துகிறார்கள்என்று  தெலுங்குதேசம்கட்சியினர்குற்றம்சாட்டிவந்தனர்.  ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் அம்பலப்படுத்துவேன்’ என்று தொடர் பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில்தான், 2014 முதல் 2019 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டிவந்தார். அந்த வழக்கில்தான், தற்போது அவரைக்கைதுசெய்திருக்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ‘பேருந்து யாத்திரை’ நடத்திவந்த சந்திரபாபு நாயுடு, நந்தியாலம் என்ற இடத்தில் செப்டம்பர் 8-ம் தேதி இரவு பேருந்திலேயே உறங்கினார். அங்கு சென்ற போலீஸார், சந்திரபாபு நாயுடு இருந்த பேருந்தின் கதவைத் திறக்கும்படி தட்டியிருக்கிறார்கள். ஆனால், கதவை அவர் திறக்கவில்லை. மறுநாள் அதிகாலை 5:30 மணிளவில் சந்திரபாபு நாயுடு பேருந்தின் கதவைத் திறந்தார். அப்போது, அவரை மாநில சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்தனர்.

 சந்திரபாபு நாயுடு கைது விவகாரம், ஆந்திர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார் என்று கருதப்படுகிறது. ஏனெனில், 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 151 (மொத்த இடங்கள் 175) இடங்களைப் பிடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார். அதேபோல, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 22 இடங்களில் (மொத்தம் 25 தொகுதிகள்) அவரது கட்சியினர் வெற்றிபெற்றனர். நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி எதுவும் இல்லை என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கூறிவருகிறார்கள்.

பிறகு எதற்காக அவரைக் கைதுசெய்தார்கள்… ஆந்திராவில் 2024-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள் ஆதரவு அளித்துவருகிறார்கள் என்றாலும், பா.ஜ.க-வுடன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தைசந்திரபாபு நாயுடுதீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி என்று கூறும் அரசியல் பார்வையாளர்கள், இந்தக் கைது நடவடிக்கையால் சந்திரபாபு நாயுடு மீது மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

 ஜெகன்மோகன் ரெட்டி மீதே ஏராளமான முறைகேடு வழக்குகள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசுக்கு அவர் ஆதரவு அளித்துவருவதால், சி.பி.ஐ-யோ, அமலாக்கத்துறையோ, அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான கைது நடவடிக்கை குறித்து பா.ஜ.க கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல சம்பவங்கள் அரங்கேறலாம் என்கிறார்கள் விவரமறிந்த சிலர்…

Related Articles

Back to top button
Close
Close