fbpx
Others

கோவை-ஹான்ஸ்,பான்பராக், குட்கா, பான்மசாலா–விற்பனை.

தமிழகத்தில் ஹான்ஸ்,  பான்பராக், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பல வகையான புகையிலைப் பொருட்களின் தயாரிப்பு, இருப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க, மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதி காவல் துறையினர் ரோந்துப் பணி, சோதனையில் ஈடுபட்டு அவற்றை விற்பவர்களை கண்டறிந்து கைது செய்தல், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைவெளியில்மறைமுகமாகவாங்கிபயன்படுத்துவதுஅதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசின் சார்பில் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினர் மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காககடத்திவரும்நபர்களைகண்டறிந்துகைதுசெய்துவருகின்றனர்   இதன் அடுத்த கட்டமாக,உணவுபாதுகாப்புத்துறையினருடன்,காவல்துறையினர்  இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, இருப்பு, கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேசமயம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதற்கு சில காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர் என்றும் பெயரளவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close