கோவை மாவட்ட ஶ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ….
கோவை, டிச., 15 :
கோவை பந்தைய சாலையில் உள்ள ஶ்ரீ சத்ய சாயி மந்திரில் காலை 5.15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், ஜோதி தியானத்துடன் தொடங்கி, காலை 8.00 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது, இதில்முன்னாள்பாலவிகாஸ்மாணவர்களின் வேதம் மற்றும் பஜனை இனிமையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னாள் பாலவிகாஸ் மாணவர் ராகுல் வரவேற்புரை வழங்க கோவை மாவட்ட தலைவர் வெங்கடேச நாராயணன், கோவை மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கிரிஜா மேனன் முன்னுரை தொகுத்து வழங்கினர். அதற்கு பிறகு சிறப்பு விருந்தினராக மாநில பேச்சாளர் கணேஷ் எடுத்துரைத்தார். பிறகு பாலவிகாஸ் குருமார்களை முன்னாள் பாலவிகாஸ் மாணவர்கள் பாராட்டி கௌரவித்தனர். பின்னர் பஜனைப் பாடல்களை வித்தியாசமான முறையில் விளையாட்டின் மூலம் கற்றுக் கொடுத்தனர். சிறப்பு விருந்தினராக மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமாதேவி மகாதேவன், திருச்சி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் விஜயலஷ்மி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருங்கால குருமார்களாக சேவை புரிய வேண்டும் என ஊக்குவித்தனர். முன்னாள் பாலவிகாஸ் மாணவர் மற்றும் சத்ய சாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஆனந்த குமாரின் சிந்தனைப் பொழிவு என்ற கலந்துரையாடல் மூலம் பல்வேறு சிந்தனைகளையும், கருத்துகளையும், தீர்வுகளையும், எடுத்துரைத்தார். பகவானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் வகையில் முன்னாள் பாலவிகாஸ் மாணவர்கள் தங்களது அனுபவங்களை தெய்வீகப் பாடல்களின் இடையில் சமர்ப்பித்து, கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்தினர். பின்னர் குழப்பத்திலிருந்து தெளிவு என்ற தலைப்பில் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்கள் மூலமாகவும், பிரார்த்தனையின் மூலமாகவும் எப்படி தீர்வு காணலாம் என்பதை எடுத்துக் கூறினர். இறுதியாக பஜனைகளின் தொகுப்பு என்ற தலைப்பில் பல பஜனை பாடல்களை மாலையாக கோர்த்து மிகவும் இனிமையுடனும், பக்தியுடனும் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்




