fbpx
Others

கோவை மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு, அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னால் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக நியமித்து, நீதிமன்ற உத்தரவின் படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இதில், 2025 முதல் 2028 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில், உதவி தலைவர்களாக ராஜா, பிரேம்நாத், ராஜேந்திரன், ஸ்ரீஹரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் செயலாளராக அனில் குமார், உதவி செயலாளராக சிவசுப்ரமணியன், பொருளாளராக சண்முகம், செயற்குழு உறுப்பினர்களாக சுந்தரராஜ், செல்வக்குமார், பிளசிங் செல்வக்குமார், சவுந்தரராஜன், அஜேஷ், வினோத், ராபின்சன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.நிறைவில், தேர்தல் அதிகாரி ராஜ், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட கால்பந்து சங்க தலைவர் மதன் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளதாகவும், கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க புதிய நிர்வாக குழு தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close