fbpx
Others

கோவை–மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்., சிலஅதிகாரிகள்வரவில்லை–கலெக்டர்நடவடிக்கை..

pawan kumar appointed coimbatore collector : கோவை மாவட்ட ஆட்சியர்  மாற்றம்... புதிய ஆட்சியராக பவன்குமார் நியமனம்!கோவைமாவட்டத்தின் உச்ச அதிகாரியான கலெக்டரை, பொதுமக்கள் நேரில் சந்தித்து மனு கொடுக்கவும், உடனடியாக தீர்வு காணவும், திங்கள் தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து துறைகளில் இருந்தும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.மக்கள் கொடுக்கும் மனுக்களை படித்து, உரிய துறையின் அதிகாரியை ஒலிபெருக்கியில் கலெக்டரே அழைப்பார். மனு மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை, அவரிடம் கலெக்டர் தெரிவிப்பார். அதிகாரி தன் துறை ஊழியர்கள் மூலமாக அதை நிறைவேற்றுவார். வழக்கமான நடைமுறையில், மனுக்கள் மீதுதீர்வுகிடைக்கமாதக்கணக்கில் ஆகலாம். குறைதீர்க்கும் நாளில் மனு கொடுத்தால், உடனடி தீர்வு கிடைக்கிறது என்பதால், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மக்கள் கோவைக்கு வருகின்றனர். கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், நடக்க முடியாமல் நகர்ந்து வரும் முதியவர் என, பல தரப்பினரும் இதில் அடங்குவர். இவர்கள் பெரும்பாலும் ஏழைகள்.ஆனால், மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக, சில அதிகாரிகள் இந்த கூட்டத்துக்கு வருவதை தவிர்க்கின்றனர். மாதத்தின் முதல் திங்கள் அன்று, துறைகளின் தலைவர்கள் ஆஜராக வேண்டும் என்பது விதி.அது மீறப்படுவதை பார்க்க முடிகிறது. இன்னும் சில அதிகாரிகள், கூட்டம் தொடங்கும்போது தலைகாட்டுகின்றனர். கையெழுத்து போட்டுவிட்டு, சற்று நேரத்தில் மாயமாகி விடுகின்றனர்.குறை தீர் அரங்கில் இருக்கும் மூன்று வழிகளில், ஏதாவது ஒரு வழியில் ‘எஸ்கேப்’ ஆகின்றனர். இதனால், அந்த அதிகாரிக்கு சம்பந்தமே இல்லாத துறையின் அலுவலர் மூலமாக, மனு மீதான பரிந்துரையை, கலெக்டர் அனுப்பி வைக்க நேர்கிறது. மனுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொலைதூரத்தில் இருந்து சிரமப்பட்டு வந்தும் பலன் இல்லையே என்ற ஏக்கத்தை, அவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூட யாருமில்லைஇது வரை வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு என்ற காரணத்தை கூறி, சில அதிகாரிகள் இக்கூட்டத்தை தவிர்த்து வந்தனர். அந்த வேலை முடிந்து விட்டதால், குறைதீர்ப்பு மீண்டும் வேகம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் நேற்று, 445 பேர் மனுகொடுக்கவந்திருந்தனர். ஒவ்வொருவரையும் சோதனைக்கு பிறகே வளாகத்தின் உள்ளே அனுமதித்தனர்.கூட்டத்துக்கு வராமல் அதிகாரிகள் டிமிக்கி.  சிலர் வரவில்லை. தகுந்த விளக்கம் தரவில்லை என்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நம்பிக்கைக்கு பங்கம் வர அனுமதிக்க மாட்டேன்,” என கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close