fbpx
Others

 கோவை- போலீஸ் அக்கா என்ற திட்டம்….

கோவை மாநகரில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. சென்னையைவிட கோவையில் போய் படிப்பதை தான் பலரும் விரும்புகிறார்கள். உயர்கல்வியின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது  போலீஸ் அக்கா திட்டத்தின் படி, கோவை மாநகரில் உள்ளCoimbatore Police Commissioner Balakrishnan explain about police akka plan அனைத்துகல்லூரிகளுக்கும்,ஒருமகளிர்காவலர்தொடர்புஅலுவலராகநியமிக்கப்பட்டிருக்கிறார்  குறிப்பிட்ட பெண் காவலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை தொடர்பு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான, பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். . இந்நிலையில் போலீஸ் அக்கா திட்டம் பற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு விஷயங்களை புதன்கிழமை அன்று தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் பேசினார். தேசிய பெண்கள் தினத்தையொட்டி கோவை தனியார் கல்லூரியில் தேசிய பெண்கள் தின விழா நடந்தது  அந்த விழாவில் கமிஷ்னர் பாலகிருஷ்ணனன் பேசும் போது, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, ஏதாவது பிரச்சினை நடந்தால் வெளியில் சொல்ல முடியாத சூழலில் மனஅழுத்தம் உருவாகிறது, அப்படியான நேரங்களில் காவல் நிலையம் செல்ல அவர்களுக்கு தயக்கமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தான் மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது  மாணவிகளே.. யாராவது பெண்களை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டினால், தனக்கு போலீஸ் அக்காவை தெரியும் என்று தைரியமாக கூறுங்கள். உங்களின் பிரச்சினைகளை போலீஸ் அக்கா கண்டிப்பாக தீர்ப்பார். காவல்துறையில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் அதிவிரைவுப்படை, மோப்பநாய், கனரக வாகன டிரைவர்கள் என அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள். நிச்சயமாக பெண்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.இந்த விழாவிற்கு பின்னர் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், :” நாங்கள் போலீஸ் அக்கா திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துகிறோம். மாணவ-மாணவிகளின் இடைநிற்றலை தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு இடைநின்ற 150 மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம். இந்த ஆண்டு 62 மாணவ-மாணவிகளை பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம். அவர்கள் பள்ளிகளில் படிக்க தேவையான உதவிகளை போலீஸ் அக்கா மூலம் செய்தும் வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் போலீசார் சென்று போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்” என அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close