Others
கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற சசிமோகன் ஐபிஎஸ். ..
கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக இருந்த சசிமோகன் பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்ஸில் உள்ள டி.ஐ.ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”கோவை சரகத்தில் ஏற்கனவே சில மாவட்டங்களில் எஸ்.பியாக பணி புரிந்து உள்ளேன். சரகத்தில் சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து, குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சட்டம் ஒழுங்கு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பணி செய்வேன் எனவும், குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பதவி ஏற்று கொண்ட கோவை சரக டிஐஜி சசி மோகன் ஐபிஎஸ் உறுதி அளித்துள்ளார்.