fbpx
Others

கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தின் எதிரில் உழவர் சிலை திறப்பு விழா !

ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாநகர காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர் ஆகியோர் பங்கேற்று திறந்துவைத்தனர்.விழாவின் ஒருபகுதியாக பொள்ளாச்சி புகழ் வள்ளிகும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம்மற்றும்சிறப்புபொங்கல்விழாநடைபெற்றது. நிகழ்ச்சி குறித்து ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி கூறுகையில், ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு. விவசாயி என்பவர் கடவுளுக்கு இணையானவர். கடவுள் சக்தி என்பது விவசாயம் தான். விவசாயம், விவசாயி இல்லை என்றால், மனித இனம் ஒன்று கிடையாது.ஒருநாடுபொருளாதாரவீழ்ச்சிஅடைந்தால், அந்நாட்டினை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் ஒரு நடவடிக்கை விவசாயம் மட்டுமே. விவசாய உற்பத்தி அதிகரிக்கும்போது தான், தொழிற்துறை வளர்ச்சி அடையும். தொழில்துறையின் அஸ்திவாரம் விவசாயம் மட்டுமே. அவ்வளவு முக்கியமான விவசாயத்தை, விவசாயிகளை மக்கள் தற்போது மறந்து வருகின்றனர். இது வருத்தத்திற்குரியது. எனவே மக்களிடையே விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த உழவர் சிலையினை நிறுவி பாராமரிக்க உள்ளோம். உழவையும்,உழவரையும்சிறப்பித்து“உழவேதலை”என்பதைபறைசாற்றும்வகையில்,இந்தஉழவர்சிலையினைமக்களின்பார்வைக்குகாட்சிப்படுத்துகிறோம். இந்த சிலை வடிவமைப்பானது இரண்டு காளை மாடுகளை கொண்டு உழவர்நிலத்தினை உழவு செய்வது போன்றும், தொடர்ந்து ஒரு பெண்மணி விதை தூவுவது போலவும், மிகவும் தத்துரூபமாக அமைத்துள்ளோம். அருகில் உள்ள தூண்களில் விவசாய பூமி போன்ற வண்ணம் தீட்டி அந்த ரவுண்டானா ஒரு விவசாய நிலம் போல் காட்சியளிக்கும் வகையில் அமைத்துள்ளோம். இந்த இடத்தினை முழுமையாக ஆர் கோல்டு நிறுவனம் தொடர்ந்து பாராமரிக்கும் என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close