fbpx
Others

கோவை–அரசு அடுக்குமாடி கொள்ளை காவல்துறை விசாரணை….?

Coimbatore apartment homeகோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஒரே நேரத்தில் 12 வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள், எதற்காக கோவை வந்தனர், இந்த கொள்ளை சம்பவத்திற்கு எப்படி திட்டமிட்டனர் என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியுள்ளார்.இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைதுசெய்துள்ளோம்.விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு காவல்துறை சென்றபோது குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்தனர். இதில் ஒரு காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. எனவே தற்காப்பிற்காக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளோம். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குனியமுத்தூர் பகுதியில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமினிய பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களுடன் இந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்துcoimbatore-police-commissioner-explains-about-kovundampalayam-housing-board-theft தங்கியுள்ளனர். துணி வியாபாரம் செய்வதாக சொல்லி தங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி, ரூ.1.50லட்சம்பணம்பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.அவர்களின் குற்ற பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரிக்கப்பட்டு, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குஅனுப்பியுள்ளோம்.கவுண்டம்பாளையம்அடுக்குமாடிகுடியிருப்பில் அதிகமான குடியிருப்புகள் இருந்ததால் அங்கு சென்றுள்ளனர். 3 மணி நேரத்தில் திருடிவிட்டு தப்பியுள்ளனர்.உள்ளூர் குற்றவாளிகள்யாரேனும்இவர்களுக்குஉதவியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில்பயணம்செய்துள்ளனர்.சம்பந்தப்பட்டஆட்டோஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை பிடித்துள்ளோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் துப்பாக்கியை பயன்படுத்தினோம். இந்த சம்பவத்தில் பார்த்திபன் என்ற காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நன்றாக இருக்கிறார். குடியிருப்பில் காவலாளிகள் இருக்கும்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கவுண்டம்பாளையம் குடியிருப்பு நிர்வாகிகளிடம் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close