fbpx
Others

 கோயம்புத்தூர்-மாவட்டாட்சியர் கவனத்திற்க்கு…?

கோயம்புத்தூர்   கல்லுக்குழி நெ.10 முத்தூரில் உள்ள வன்னிகுமாரசாமி கோவில் பகுதியில் இருந்து பகவதிபாளையம் வழியாக கிணத்துக்கடவுக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையை அந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள்  வியாபாரிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திவருகின்றனர் இந்தநிலை யில் வன்னிகுமாரசாமி கோவில் எதிரே கல்லுக்குழி ஒன்று உள்ளது. தார்சாலையையொட்டி உள்ள இந்த கல்லுக்குழியில் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.இரும்பு தடுப்புகள் இதை கருத்தில் கொண்டு அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கல்லுக்குழியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே அமைத்து உள்ளனர். மீதமுள்ள தூரங்களில் இரும்பு தடுப்புகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் கல்லுக்குழியில் இறங்கிவிடும் அபாயம் காணப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. நடவடிக்கை இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- தார்சாலையில் செல்லும் வாகனங்கள் கல்லுக்குழியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக இரும்பு தடுப்புகள் அமைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே அமைத்து உள்ளனர். மீதமுள்ள தூரத்துக்கு அமைக்காததால், இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, கல்லுக்குழிக்குள் இறங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே கல்லுக்குழியின் அச்சுறுத்தலின் இருந்து தப்பிக்க, மீதமுள்ள இடங்களிலும் இரும்பு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close