fbpx
Others

கோபி அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே இருந்த குழிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மனமுடைந்த பழனிச்சாமி நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்.

Related Articles

Back to top button
Close
Close