Others
கோபியில் சரக்கு வேன்-கார் மீது டிராக்டர் மோதியது….

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் இருந்து கோபி நோக்கி அதிவேகமாக டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கரைபுதூர் பகுதியில் சென்றபோது டிராக்டர் நிலைத டுமாறி அங்குள்ள ஒரு கடையின் முன்பு நிறுத்தி இருந்த சரக்கு வேன், கார் மீது அடுத்தடுத்து மோதியது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதகாயமும் ஏற்படவில்லை. மேலும் சரக்கு வேன் கடையின் முன்பு இருந்த சுவரின் மீது மோதியதில் மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தன. இதனால் அந்தபகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்வினியோகத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்