fbpx
Others

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரும் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்க வந்திருந்தபோது, குண்டு வெடிப்பில்ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரும் விடுதலை கொல்லப்பட்டது உலகையே ஒரு சேர உலுக்கிய துயர சம்பவம் ஆகும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு இந்த கொடிய சம்பவத்தில் அவருடன் மேலும் 15 பேர் கொல்லப்பட்டதும் மறக்க முடியாத சோக நினைவுகளாகி விட்டன. இந்தப் படுகொலை வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி, மொத்தம் 41 பேரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது. அவர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்கு என்று சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சிறப்பு தடா கோர்ட்டு அமைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த கால கட்டத்தில் 15 பேர் இறந்து விட்டனர். அனைவருக்கும் தூக்கு எஞ்சிய 26 பேர் மீதான விசாரணையை தடா கோர்ட்டு தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் அனைவர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, நீதிபதி நவனீதம் 1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாற்றியமைக்கப்பட்ட தீர்ப்பு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரும், இந்த தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த விசாரணையின் முடிவில், தடா கோர்ட்டின் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டது. தண்டிக்கப்பட்டவர்களில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்; நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி இந்த தீர்ப்பு வந்தது. 7 பேரும் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், நளினியின் மரண தண்டனையை கவர்னர் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட எஞ்சிய மூவரின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  இதையடுத்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 7 பேரும் வெவ்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். பேரறிவாளன் விடுதலை இந்த நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்து கடந்த மே மாதம் 18-ந் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அந்தத் தீர்ப்பில், “நீண்ட கால சிறைவாசத்தின்போதும், பரோல் காலத்திலும் பேரறிவாளன் நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது, உடல் உபாதைகளையும், சிறைவாசத்தின்போது பெற்ற கல்வித்தகுதியையும், தண்டனை குறைப்பு மனு, அது தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை 2½ ஆண்டு காலம் நிலுவையில் வைக்கப்பட்டதையும் கருத்தில் கொள்ளும்போது, இந்த விவகாரத்தை மீண்டும் கவர்னருக்கு மீண்டும் திருப்பி அனுப்புவதை கோர்ட்டு விரும்பவில்லை” என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. நளினி, ரவிச்சந்திரன் முறையீடு பேரறிவாளன் விடுதலையை அடுத்து, இந்த வழக்கில் அவரைப்போலவே மற்றவர்களும் விடுதலை செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நளினியும், ரவிச்சந்திரனும் முறையிட்டனர். அதை விசாரித்த ஐகோர்ட்டு, “சுப்ரீம் கோர்ட்டைப்போன்ற அதிகாரம் எங்களுக்கு இல்லை” என்று கூறி, அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி பிறப்பித்த அந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்பேரில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்தன. 6 பேரும் விடுதலை தொடர்ந்து இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் அவர்கள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். பேரறிவாளன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்று கூறி நீதிபதிகள் இவர்கள் இருவரை மட்டுமல்லாது, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் (நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்) விடுதலை செய்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக 31 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி பிறந்துவிட்டது. தீர்ப்பின் அடிப்படை அம்சங்கள் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:- * நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவரது நடத்தையும் திருப்திகரமாக உள்ளது. அவர் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை டிப்ளமோ பெற்றுள்ளார். ரவிச்சந்திரனின் நடத்தையும் திருப்திகரமாக இருந்துள்ளது. அவரும் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் கலையில் முதுநிலை டிப்ளமோ பெற்றதுடன் பல படிப்புகளை படித்துள்ளார். * அரசியல் சாசனம் பிரிவு 142, முழுமையான நீதியை வழங்குவதற்கு தேவையான எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கலாம் என கூறி உள்ளது. இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 302-ன் கீழ் தண்டிக்கப்பட்ட மேல்முறையீட்டாளரின் விடுதலை விவகாரத்தில், மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டியவராக இருக்கிறார். சந்தேகத்துக்கு இடமின்றி, இந்த வழக்கில் அனைவருக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. எனவே பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு இந்த கோர்ட்டு எடுத்துக்கொண்ட அம்சங்கள், தற்போதைய மனுதாரர்களுக்கும் பொருந்தும். அனைத்து மேல்முறையீடுதாரர்களும் குற்றம் தொடர்பான தண்டனையை அனுபவித்துவிட்டதாக கருதுகிறோம். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, கால தாமதத்தின் அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த அனைவருமே தண்டனையை அனுபவித்து விட்டதாக கருதி, அவர்கள் வேறு வழககுகளில் தேவைப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 2018-ம் ஆண்டு, செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 பேரின் கருணை மனுக்களையும் பரிசீலனை செய்து, அரசியல் சாசனம் பிரிவு 161 வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் அவர்களை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்தது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close