fbpx
OthersRE

கொரோனா வராமல் இருக்க என்ன சாப்பிடலாம்? என்ன செய்ய வேண்டும்

இந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்த கொரோனா வைரஸ் அனைத்து உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது.

தற்போது தமிழ் நாட்டிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தாலும். நாம் நம்மை காத்து கொள்வதுபோல் வராது.

முதலில் நோய் தாக்காமல் தடுக்க கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவதும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதும் மட்டுமே தீர்வு.

” நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் இவற்றை தினமும் உணவோடு சேர்த்துக்கொள்ளலாம்” என்கிறார் உணவியல் நிபுணர் ஜூலியட் ஷீபா.

மேலும் அவர் கூறியதாவது;

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தாலே எத்தகைய வைரஸின் தாக்கமும் நம் உடலை எதுவும் செய்யாது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் , காய்கறி,பழங்கள் மற்றும் கீரைவகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்றைய சூழலில் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்து கொள்வது நல்லது.சிட்ரஸ் நெல்லிக்காய் , எலுமிச்சை, ஆரஞ்சு , சாத்துக்குடி, திராட்சை மற்றும் பெர்ரீ வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

இவற்றை அடிக்கடி உட்கொள்வதில் மூலம் , உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய முடியும். காலையில் எழுந்ததும், இளநீர், ஜூஸ் , அல்லது மோர் குடிக்கலாம். அல்சர் இருப்பவர்கள் எலுமிச்சை போன்ற ஜூஸ்களை தவிர்ப்பது நல்லது.

மதியத்துக்கு காய்கறி சூப் உகந்தது.கூட்டு, பொரியல், சாம்பார் என அவற்றில் இரு வகை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கீரை உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.அதிலும் பசலை கீரையில் வைட்டமின் சத்து அதிகம் உள்ளது.காபி, டீ, கூல்ட்ரிங், மற்றும் எண்ணெயில் வேகவைத்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

இரவு உணவுக்கு ராகி, கோதுமை போன்ற சிறுதானிய வகைகளை எடுத்து கொள்ளலாம்.குறிப்பாக தினமும் 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதின் மூலம் கண்டிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துகொள்ள முடியும்.என கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close