கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்து பேரிடராக அறிவித்த கேரள அரசு.!
கொச்சி துறைமுகம் அருகே சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் விழிஞ்ஞத்தில் இருந்து கொச்சிக்கு 640 கண்டெய்னர்களுடன் சென்ற எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கொச்சி அருகே கடலில் மூழ்கியது . இந்தக் கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில் 10க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு உள்பட ஆபத்தான அமிலப் பொருட்கள் இருக்கின்றன. வெடிக்க கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியனவும் உள்ளன.கடலில் மூழ்கிய பல கண்டெய்னர்கள் கடந்த சில தினங்களாக கொல்லம், ஆலப்புழா,திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. இதிலிருந்து வெளியேறிய பஞ்சு, பிளாஸ்டிக் உள்பட பல்வேறு பொருட்கள் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன. நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பிளாஸ்டிக் உள்பட ஏராளமான பொருட்கள் கரை ஒதுங்கின.கரை ஒதுங்கும் அமிலப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில், கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரளஅரசுஇதனைபேரிடராகஅறிவித்துள்ளது.இதனால்,முன்னெச்சரிக்கைநடவடிக்கைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதே போன்று, சர்வதேச கடல்வழி சட்டங்களின் கீழ் இழப்பீடு தரப்பட வேண்டும் என மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்திடம் கேரள அரசு முறைப்படி தெரிவித்ததுள்ளது. இதைத்தொடர்ந்து எம்எஸ்சி எல்சா 3 கப்பல் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது.