fbpx
Others

கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் விடு­தலை — சிவ­கங்கை நீதி­மன்­றம் உத்­த­ரவு…

சொத்­துக் குவிப்பு வழக்­கில் அமைச்­சர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் மற்­றும் குடும்­பத்­தி­னரை விடு­தலை செய்து சிவ­கங்கை நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் கடந்த 2006 முதல் 2011 வரை இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ராக கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் இருந்­தார். இவர் அமைச்­ச­ராக பணி­யாற்­றிய காலத்­தில் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக ரூ.1.20 கோடி சொத்து சேர்த்­த­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை போலீ­சார், கடந்த 2012ம் ஆண்டு கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன், அவ­ரது மனைவி பிரேமா, தாய் கருப்­பாயி அம்­மாள், மகன் கோகு­ல­கி­ருஷ்­ணன், மைத்­து­னர் செந்­தில்­வேல் ஆகி­யோர் மீது வழக்­குப்­ப­திவு செய்­த­னர்.இந்த வழக்கு சிவ­கங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்­தது. வழக்கு விசா­ர­ணை­யின் போது அமைச்­ச­ரின் தாய் கருப்­பாயி அம்­மாள் இறந்­து­விட்­டார். இந்த வழக்­கில் விசா­ரணை முடிந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் தீர்ப்பு கூறப்­பட்­டது.இதை­யொட்டி அமைச்­சர் உள்­ளிட்ட அனை­வ­ரும் நீதி­மன்­றத்­தில் ஆஜ­ரா­கி­னர். வழக்கை விசா­ரித்த நீதி­பதி அறி­வொளி, வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்த குற்­ற ச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டா­த­ தால் அமைச்­சர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் உள்­ளிட்ட நான்கு பேரை­யும் விடு­தலை செய்து உத்­த­ர­விட்­டார்.

Related Articles

Back to top button
Close
Close