fbpx
Others

கேரள மாநிலஅரசு உடன் இனி நடவடிக்கை எடுக்குமா……?

கேரள மாநிலத்தில் கடந்த பத்து வருடங்களாக காட்டு யானை தாக்குதலில் இதுவரை சுமார் 40 தமிழர்கள் பலியாகி உள்ளனர் இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புணர் பூப்பறை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது தமிழக கேரளாவை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் சாந்தாம்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தலக்குளம் என்ற இடத்தில் இன்று காட்டு யானை மிதித்து ஒருவர் பலியானார்  இறந்த நபர் போடி குலாலர் பளையத்தைச் சேர்ந்த சாமுவேல் 70 வயது ஆகும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும் ஐந்து பெண் குழந்தைகளும் உள்ளன இவர்கள் தல குளம் பகுதியில் உள்ள ஏலஎஸ்டேட்டில் தங்கி பணியாற்றி வந்து கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஏலத் தோட்டத்தில் ஏல செடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது பின்புறமாக வந்த ஒற்றைக் கொம்பன் என்ற யாணை சாமுவேலை தூக்கி வீசி அடி வயிற்றில் மிதித்ததில் குடல் சரிந்து சம்பவ இடத்தில் பலியானார்.

கடந்த பத்து ஆண்டுகளாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாந்தாம்பாறை, சின்னக்காணல் ,பெரிய கானல் ,மூணார் ,பண்ணையார் ,உள்ளிட்ட பகுதிகளில் 40க்கு மேற்பட்ட தமிழர்கள் யானை மிதித்து பலியாகி உள்ளனர் ஆனால் மலையாளிகள் இரண்டு மூன்று பேர் மட்டும்தான் பலியாகி உள்ளனர்சாமுவேல் பலியானதை கண்டித்து கொச்சு – தனிஷ்கோடி, மூனாறு-குமுளிதேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் பூப்பாறை விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்ஆம்புல ன்னி வச்சி கொண்டு வரப்பட்ட சாமுவேல் உடலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகமாக ஏழைத் தோட்டத் தொழிலாளி தமிழர்கள் இறந்து வருவதால் இவர்களுக்கு நஷ்ட ஈடும் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்பது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இடுக்கி மாவட்ட வனச்சரகர் விஜி 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர்  இதனை மறுத்த இப்பகுதி மக்கள் இறந்த குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடும்,அவர்களுடைய குடும்பத்துக்கு வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைக்கு வழங்கப்படும் என குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் இருந்து மூணாறுக்கும் செல்லும்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
Close
Close