fbpx
Others

 கேரளாவில்குரங்கம்மை காய்ச்சல்—எச்சரிக்கை

 பெரும்பாவூர், கேரளா, கடந்த 12ஆம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை காய்ச்சல் இருப்பது கண்டறிபட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவிலேயே குரங்கம்மை காய்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். அவருடன் அவருடைய பெற்றோர்கள் மற்றும் நெருங்கி பழகிய உறவினர்கள் அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக, கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் , அவர் கூறுகையில், குரங்கு காய்ச்சல் நோய் இங்கு முதன்முதலாக கண்டறியப்பட்டதை அடுத்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இது குறித்து யாரும் பயப்பட தேவையில்லை, குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குரங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் , இந்த நோய் பாதிக்க துவங்கும் போது உடல் தளர்ச்சி, காய்ச்சல், மற்றும் கழுத்தில் வீக்கம், தொண்டை வலி, இடுப்பு வலி போன்ற வலிகள் தோன்றும், அதன்பிறகு இந்த நோய் ஆறு முதல் 13 நாட்கள் வரை தீவிரமடையும் 13வது தினத்தன்று உடலில் மசூரி போன்று கொப்புளங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மிருகங்கள், வளர்ப்பு மிருகங்கள் மற்றும் இதர விலங்குகளுடன் சேர்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close