fbpx
Others

கூட்டணிகட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு நிகழ்ச்சியில் பியூஸ்கோயல்…..

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை!தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எதிர்கட்சியான அதிமுக தொகுதி பங்கீட்டில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது. இதன் படி ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை வீழ்த்தும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. பாஜக, பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைத்துள்ளது. அந்த கட்சிகளோடு கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, சிறிய கட்சிகளை இரட்லை இலை சின்னத்தில் போட்டியிட வைப்பதா.? அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பதா.? என பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் ஒரு சில இழுபறி ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்துதமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்” - பியூஷ் கோயல் சந்திப்புக்குப் பின் பழனிசாமி பேட்டி! ஆலோசனை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியது.அந்த வகையில் இன்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளதொகுதிகளின்பட்டியல்வெளியாகவுள்ளது. இதற்காக கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொருப்பாளருமான பியூஸ் கோயல் தமிழகம் வர இருந்தது ஆனால் பேச்சுவார்த்தை முடிவடையாத காரணத்தால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தைஎட்டியதையடுத்துஇன்றுகாலைசென்னைவந்தார்பியூஸ்கோயல்,இன்றுநடைபெறும்கூட்டணிகட்சிகளுக்குதொகுதிபங்கீட்டுநிகழ்ச்சியில்பங்கேற்கவுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல்,திமுககாங்கிரஸ்கூட்டணிமீதுதமிழகமக்கள் அதிருப்தியில்உள்ளதாகவும்,தமிழ்நாடுமாற்றத்திற்குதயாராகஉள்ளதாகவும்தெரிவித்தார்.தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சுதந்திரமாக நடத்துவோம் எனவும் பியூஸ் கோயல் கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலை முதல் கூட்டணி கட்சிகளுக்குஒதுக்கப்படவுள்ளதொகுதிகளின் பட்டியல் வெளியாகவுள்ளது. மேலும் எந்த எந்த தொகுதிகள் என்ற பட்டியலும் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்தாக இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர்களின் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியாக இருப்பதாக அதிமுக வட்டார தகவலாக உள்ளது. .அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு ,  பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு17தொகுதி   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 9 தொகுதிகள்   தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ,  புரட்சி பாரதம் கட்சி -2 , புதிய நீதி கட்சி  -2    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-2  ,இந்திய ஜனநாயக கட்சி -1 ,இந்திய குடியரசு கட்சி -1 அகில இந்திய பார்வர்ட் பிளாக் -1  பசும்பொன் தேசிய கழகம் -1   பெருந்தலைவர் மக்கள் கட்சி-1   தென்னிந்திய பார்வர்ட் பிளாக் -1 சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் -1 தமிழ்மாநில முஸ்லீம் லீக் -1

Related Articles

Back to top button
Close
Close