fbpx
Others

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ—எல்லாபுரம் ஒன்றிய திமுக அவை தலைவரைகன்னத்தில்அறைந்தார்.

எல்லாபுரம் ஒன்றிய திமுக அவை தலைவரைகன்னத்தில் அறைந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்,வடமதுரை மற்றும் கொசவன்பேட்டைஊராட்சிகளில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திமுக தலைமைச்செயற்குழுஉறுப்பினரும்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ஏனம்பாக்கம் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்,சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர்கிழக்குமாவட்டதிமுகபொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்,திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினரும்,கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.அப்பொழுது திருவள்ளூர் கிழக்குமாவட்டதிமுகபொறுப்பாளர்வல்லூர்எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜின்ஆதரவாளரும்,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக அவை தலைவருமான திருநிலை டி.கே.முனிவேல் எல்லாபுரம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தனக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்ஆ.சத்தியவேலு தன்னை புறக்கணிப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினரான தாங்களும் என்னை புறக்கணிக்கிறீர்களா?
என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேசினாராம்.இதன் பின்னர், கொசவன்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் தன்னை புறக்கணிப்பதாக எம்எல்ஏவிடம் முனிவேல் முறையிட்டாராம்.இந்நிலையில்,கொசவன்பேட்டையில்நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டு காரில் ஏற அனைவரும் நடந்து சென்றபோது திருநிலை டி.கே.முனிவேல் மாவட்ட பொறுப்பாளருக்கு ஆதரவாகவும்,எம்எல்ஏவுக்கு எதிராகவும் கருத்து கூறிபேசியவண்ணம் நடந்து வந்து கொண்டிருந்தாராம்.இதனால் ஆத்திரமடைந்த டி.ஜெ.கோவிந்தராஜன் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அவை தலைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம்.மேலும், கட்சியில் கோஷ்டி பூசலை உருவாக்குகிறீர்களா? என்று எம்எல்ஏ ஆவேசமாக டி.கே.முனிவேலை திட்டி கன்னத்தில் பளார்! பளார்! என்று சரமாரியாக அடித்தாராம்.இதனை சிலர் வீடியோ எடுத்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினருக்கு பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல்? உச்சகட்டத்தை அடைந்துள்ளது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறி வருகின்றனர்.இந்நிலையில், திமுகவில் 40 ஆண்டு காலமாக உள்ளடி.கே.முனிவேலுக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டித்து திருநிலை கிராமத்தில்சிலம்பரசன் தலைமையில் கிராம மக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் கருப்பு கொடிய ஏந்திய வண்ணம் எம்எல்ஏ-வை கண்டித்தும் முனிவேலுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.மேலும்,திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் இக்கிராமத்தில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.

Related Articles

Back to top button
Close
Close