குடியரசுதினவிழாஅன்று 2025 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

நீடாமங்கலம் ஜனவரி 26
நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த நாள் அன்று மரக்கன்றுகள் வளர்க்கும் பயிற்சி அளித்து, விதைகள், இயற்கை உரங்கள், விதை வளர்வதற்கான பைகள் வழங்கி அந்த அந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் வளர்த்து வந்தனர். குடியரசு தின விழா அன்று வழங்கதிட்டமிட்டு இன்று மணிமேகலை நடுநிலைப்பள்ளி, இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி பெரம்பூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வட காரவயல், நீடாமங்கலம் மேனி நிலைப்பள்ளி உள்ளிட்ட மாணவர்களுக்கு வளர்ந்த மரக்கன்றுகள் 2025 வழங்கப்பட்டது. நீடாமங்கலத்தில் பேரூராட்சி தலைவர் ராமராஜ் பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீராமன், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையாசிரியர்கள், தேவி லெட்சுமி, காந்தி, வடகாரவயல் மல்லிகா, பெரம்பூர் இளஞ்செழியன் மணிமேகலை பள்ளியில் சினிவாசன் ஆகியோர் வழங்கினர். சிறப்பாக மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளி ஆண்டு விழாவில் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று செயலாளர் ஜெகதீஸ் பாபு தெரிவித்தார்