fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்

இனி நரேந்திரமோடி அல்ல சரண்டர் மோடி!: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

புதுடில்லி:

இந்திய – சீன எல்லை பிரச்னை தொடர்பான ஜப்பான் டைம்ஸ் கட்டுரையை பகிர்ந்துள்ளார் முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! அப்பொழுது குறிப்பிடும்பொழுது பிரதமர் மோடியை ‘சரண்டர் மோடி’ என அவர் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான்  ஜப்பான் டைம்ஸ் எனும் செய்தி தாளில் வெளிவந்துள்ள கட்டுரையை ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தக் கட்டுரையில், ‘இந்தியாவின் அமைதியை விரும்பும் கொள்கை, சீனாவின் ஆவேசமான போக்கைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது.

2வது முறையாக சீனா இந்தியாவின் எல்லை பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா? எனத் விமர்சித்திருந்தது.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள  ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி இனிமேல் சரண்டர் மோடி என  தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close