fbpx
Others

குஜராத்: பாஜக மந்திரி ராஜினாமா…. காங்கிரசில் இணைந்தார்…!

 குஜராத்தில் பாஜக மந்திரி ஜெய்நாராயண் வியாஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். காந்திநகர், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.குஜராத்: பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்...! அதேவேளை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர். இதனிடையே, குஜராத் மாநில பாஜக அரசில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ். 75 வயது.  இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரசில் இணைந்தார்.   ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்தமாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close