fbpx
Others

குஜராத்– அரசு தேர்வு முடிவு 26 ஆண்டுகளுக்குப் பின்வெளியீடு

 குஜராத்தில் மாநில அரசு நடத்திய தேர்வு எழுதியவர்களுக்கு 26 ஆண்டுக்கு பின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர்கள் ஜகதீஷ் தனானி,கே.வி.வதோதரியா,பி.டி.வெக்காரியா மற்றும் நந்தானியா. கடந்த 1997ம் ஆண்டு, வேளாண்துறை துணை இயக்குனர் பதவிக்கான தேர்வு எழுத இவர்கள் விண்ணப்பித்தனர். ஆனால், அப்போது தேர்வுக்கான வயது வரம்பு 30 என குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் 30 வயதை கடந்து இருந்ததால் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, 4 பேரும் குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் 4 பேரும் தேர்வு எழுதவும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது, தேர்வு முடிவின் விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஜெகதீஷ், வதோதரியா மட்டும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என தெரியவந்தது. ஆனால் ஜகதீஷ்க்கு 58 வயதாகி விட்டது. வதோதரியா வேளாண் பல்கலைகழகத்தில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜகதீஷ் ஓய்வு வயதை எட்டிவிட்டதாலும், வதோதரியா ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டதாலும் பணி நியமனம் வழங்க முடியாது என தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய், நீதிபதி பிரேன் வைஷ்ணவ் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தனர். இதனால் தேர்வில் வெற்றி பெற்ற பின்னரும் அதே வயது பிரச்னையால் அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காமல் போய் உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close