கிருஷ்ணகிரி–மிட்டஅள்ளி-கிராம நிர்வாகஅலுவலர் ராமநாதன் கைது…
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தாபுரத்தை சேர்ந்த காசி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது உறவினரின் சொத்துக்காக வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு முடிவு செய்தார். அதற்காக விண்ணப்பித்த போது மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் லஞ்சம் கேட்டாராம். இந்நிலையில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.சில வருவாய்துறை அலுலவர்கள், நிலம், பட்டா, பத்திரப்பதிவு சம்பந்தமாக அணுகும் போது, லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கலாம். அவர்களிடம் ஆடியோ ஆதாராம் அல்லது வீடியோ ஆதாரம் அல்லது செல்போன் அழைப்புகள் உள்பட ஏதாவது வலுவான ஆதாரங்களுடன் சென்று புகார் அளித்தால், கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். ரசாயணம் தடவிய நோட்டுக்களை கொடுக்க வைத்து பொறி வைத்து பிடித்து கைது செய்வார்கள்.வருவாய்துறையில் எந்த அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் பல்வேறு அரசு துறையில் லஞ்சம் கேட்டாலும் புகார் அளிக்கலாம். லஞ்சம் வாங்கியதாக சிக்கும் ஊழியர்கள் கைது செய்யப்படுவதுடன், சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையும்
எடுக்கப்படும். இது நடைமுறையாக இருக்கிறது. மக்கள் பலர் தற்போது லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து புகார் அளிக்கிறார்கள். அப்படித்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு விஏஓ கைதாகி உள்ளார்.கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தாபுரத்தை சேர்ந்த காசி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவால். இவருடைய அண்ணன் மகன் கணபதி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய மனைவி லட்சுமி (42) என்பவருக்காக வாரிசு சான்றிதழ் கேட்டு முன்னாள் ராணுவ வீரர் காசி விண்ணப்பித்து இருந்தார். இதற்காக அவர் மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் (48) என்பவரை கடந்த அக்டோபர் 22-ந் தேதி சந்தித்தார்.அப்போது ராமநாதன், ரூ.5 ஆயிரம் தந்தால் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என்று கூறினாராம். இதன்பிறகு கடந்த 25-ந் தேதி மீண்டும் வந்து காசி, வாரிசு சான்றிதழ் கேட்க, ரூ.5 ஆயிரம் லஞ்சம் தந்தால் வாரிசு சான்றிதழ் தருவேன் என்று கறாராக கூறிவிட்டாராம். இதன்பிறகு நேற்று காலை காசி மீண்டும் வாரிசு சான்றிதழ் கேட்டு சென்றார்.அப்போது ரூ.3 ஆயிரம் தந்தால் சான்றிதழ் தருவதாக கூறினாராம். லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத காசி, இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.3 ஆயிரத்தை காசி, கிராம நிர்வாக அலுவலர் ராமநாதனிடம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ராமநாதனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.