fbpx
Others

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு– ராகுல் காந்தி கண்டனம்!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்! |  Chennaionlineகாஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது; காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறாமல், அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் நடக்காது. அப்பாவி இந்தியர்கள்இதுபோன்றுதங்கள்உயிரைஇழக்கமாட்டார்கள்.என்றுகூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். “கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசினேன். அங்குள்ள தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நம்முடைய முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவோம்” என்று கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close