fbpx
Others

காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக….நடனம்…?

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கின்றனர் என்பது இந்த வழக்கில் தெளிவாகிறது என சாடிய நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை என குறிப்பிட்டனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எஸ்.பி.வேலுமணி மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கூறிய நீதிபதிகள்,

காவல்துறையில் அரசியல் மற்றும் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை அரசுகள் அமல்படுத்தாததால், அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளில் நீதிமன்றங்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் போல செயல்பட வேண்டிய நிலை இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close