fbpx
Others

கார்கே-அரசியலமைப்பின்மதிப்பும், நாடாளுமன்ற மரபும்காக்க உறுதி.

கார்கே மேலும் தனது உரையில், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய அரசியலமைப்பினை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்புகளையும் நினைகூர்ந்தார். கார்கே தனது பேச்சில், “அந்த சென்ட்ரல் ஹால், பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் ‘ட்ரஸ்ட் வித் டெஸ்டினி’ உரைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. பிரதமர் மோடி நேற்றைய தனது உரையில் இதனை நினைவுகூர்ந்தார். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை நினைவு கூர்ந்ததற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்” என்று தனது உரையின்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நவீன இந்தியாவை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அரசியலமைப்பு இல்லம் என பெயரிடலாம் என்றும் பரிந்துரைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close