fbpx
Others

காமராஜரின் 121வது பிறந்த நாள்,-7,740 புத்தகங்களைஅரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்.

காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளான இன்று சென்னை, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ம் ஆண்டு திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தும், 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகும், தன்னை சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளை தவிர்த்து, அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதன்படி, தன்னை சந்திக்க வந்த பலரும் வழங்கிய 1.5 லட்சம் அறிவார்ந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரி கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் வழங்கி வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி இன்று சென்னை, நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபகாலங்களில் தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்.இதனிடையே காமராஜரின் 121வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.மேலும் பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.800 மாணவ மாணவியருக்கு தமிழ் அகராதி புத்தகம் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசையும் முதல்வர் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close