fbpx
Others

காஞ்சிபுரம்- உரிய ஆவணங்களின்றி இயங்கி வந்தஆட்டோக்கள்–பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி காஞ்சிபுரம் நகரில் இயங்கி வந்த 8 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தார்.காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பெரிதும் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திடீர்னு வாகன சோதனை மேற்கொண்டார்.இதில் காஞ்சிபுரம் நகர் மற்றும் நகரில் இருந்து செல்லும் ஆட்டோக்களினை மடக்கி அவற்றின் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்.இதில் இன்ஷூரன்ஸ் ஆட்டோ உரிமம் புதுப்பித்தல் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாத பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது : சிறை பிடிக்கப்பட்ட 7 ஆட்டோக்களுக்கு ரூபாய் 1,00,000/- அபராதமாக நிர்ணயிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close