fbpx
Others

காங்கிரஸ்கர்நாடகாவில்ஆட்சியை பிடிக்கும்—-தகவல்.

விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகாவில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லோக் போல் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  அந்த கருத்து கணிப்பின்படி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 116-122  இடங்களை கைப்பற்றும் என்றும் 39%42% வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜகவுக்கு 77-83 இடங்களும் மஜகவுக்கு 21-27 இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ஜனவரி 15 முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 30 வாக்குச் சாவடிகளில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக லோக் போல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close