fbpx
Others

கவலைக்கிடமான நிலையில் நியூஸ் 7 பல்லடம் செய்தியாளர்!!

தமிழ்நாடுபத்திரிகையாளர்சங்கம்கண்டனம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் .நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் செய்தி எங்கள் நெஞ்சத்தில் இடியென பாய்ந்து இருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற இந்த நிலைமையை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது.தமிழ்நாடு முதல்வர். மு. க .ஸ்டாலின் உரிய நடவடிக்கையை மிக விரைவாக எடுத்து தாக்குதலில் ஈடுபட்டசமூகவிரோதகும்பலைஉடனடியாககைதுசெய்துஅவர்கள்மீதுதக்கநடவடிக்கைஎடுப்பதோடுபத்திரிகையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக்கூடிய சட்டங்களை வருகின்ற சட்டமன்ற கூட்டத்துடன் நிறைவேற்றி பத்திரிகையாளர்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க (டி.யூ.ஜெ.)தலைவர். பி. எஸ். டி. புருஷோத்தமன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.உள்துறையைகையில்வைத்துள்ளதமிழ்நாடுமுதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்கள்இப்பிரச்சினையில்உடனடியாகதலையிட்டு,உண்மைகுற்றவாளிகள்மீதுநடவடிக்கைஎடுப்பதுடன்,கவலைக்கிடமானநிலையில் உள்ளசெய்தியாளர்நேசபிரபுவுக்கு,உரியமருத்துவஉதவிகள்செய்துஅவரதுஉயிரைபாதுகாக்கவெண்டும்என்று,T.UJ.வலியுறுத்திகேட்டுக்கொள்கிறது.இதுகுறித்து, T.U.J.மாநிலத்தலைவர்P.S.D.புருஷோத்தமன் வெளியிட்ட அறிக்கையில்கூறி இருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் மற்றும் கோவை மாவட்டத்தின் சூலூர் பகுதி நியூஸ் 7 தமிழ் செய்தியாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் நேச பிரபு.அரசு சார்ந்த செய்திகள் மட்டுமல்லாது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் சார்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய செய்திகளை வெளிப்படுத்தி வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்று24 ம் மதியம் மூன்று மணி அளவில் இருந்து அவரது வீட்டிற்கு அருகாமையில் வாகன எண் இல்லாதஇருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மர்ம கும்பல் அவரது விலாசம் மற்றும் அவர் குறித்த தகவல்களை விசாரித்து வந்துள்ளனர்.காலை முதல் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் நேசபிரபு, மாலை வீடு வந்த நிலையில் இவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த தகவல் இவருக்கு கிடைத்துள்ளது.மாலை நேச பிரபு வீட்டில் இருந்தபோது இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வாகன எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.இதை கண்ட அவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து புகார் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக கமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திலிருந்து நேச பிரபுவை தொடர்பு கொண்டு புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். புகார் குறித்த விளக்கத்தை அவர் அளித்த நிலையில், தன்னை மீண்டும் மீண்டும் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வருவதாகவும் வீட்டைச் சுற்றி வலம்வந்துகொண்டிருப்பதாகஅவர்தெரிவித்திருந்தார்எனகூறப்படுகிறது.,காவல்துறையினர்அவரை,நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்துபுகார்அளிக்க வலியுறுத்தி உள்ளனர் . தனக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து காவல்துறையிடம் தான் வீட்டை விட்டு வெளியேறுவது ஆபத்திற்கு வழி வகுக்கும்,என் உயிரை காக்கஉடனடியாகபோலிஸாரைஅனுப்பிவையுங்கள்,எனபோலீசாரிடம்தொடர்ந்து மன்றாடி, வலியுறுத்தியும் கூட காவல்துறையினர் புகாரை அலட்சியப்படுத்தும் வகையில் காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் காவலர்கள் வேறு பகுதியில் இருக்கின்றார்,பற்றாக்குறையில்உள்ளனர்எனதெரியப்படுத்திஉள்ளனர்.இந்நிலையில் தொடர்ந்து தன்னை நோட்டம் விடுவதை அறிந்து நேச பிரபு தனது நான்கு சக்கரவாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறி தன்னை நோட்டு விடுபவர்கள் எந்த வாகனத்தில் வருகிறார்கள் , அவர்கள் வாகன எண் , அடையாளம் தெரிபவர்களா என்பதை காண வந்துள்ளார். காவல்துறையினருடன் தொலைபேசியில் தன்னை நோட்டம் விடுபவர்களின் விவரத்தை தொடர்ந்து வழங்கிக் கொண்டே வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மர்ம கும்பல் தன்னை கடந்து சென்ற நிலையில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு தன்னை நோட்டமிடுபவர்கள் குறித்த விவரங்களை செல்போனில்காவலர்களுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் திடீரென கடந்து சென்ற மர்ம கும்ப கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கார்களில் சுமார் 20 பேர் நேச பிரபுவை சுற்றி வளைத்துள்ளனர்.தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த நேச பிரபு உடனடியாக அருகில் இருந்த பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார்.பெட்ரோல் பங்கில் இரண்டு நபர்கள் மட்டுமே இருந்த நிலையில் ஏராளமானோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைவதை கண்டு அதிர்ச்சி அடைந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஒதுங்கிக் கொள்ள மர்ம கும்பல் பெட்ரோல் பங்க் அலுவலகத்தின் கதவுகளை உடைத்து நேச பிரபுவை கடுமையாக தாக்கியதோடு அவரை வெளியே இழுத்து கை கால் என பல்வேறு இடங்களில் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். ஆள் நடமாட்டம் குறைவான அப்பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தடுக்க கூட நபர்கள் இல்லாத நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நேச பிரபுவை அப்படியே விட்டுவிட்டு மர்ம கும்பல்தப்பிஓடியது.இச்சம்பவத்தைப் பார்த்தஅவ்வழியேசென்றவர்கள்உடனடியாககாமநாயக்கன்பாளையம்காவல்துறையினர் நேரில் சென்று தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நேச பிரபுவை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்கு முதற்கட்ட முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கை கால்கள் மற்றும் உடல் என பல்வேறு இடங்களில் 62 ஆழமான வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆறு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் அவரதுஉடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமானநிலையில் இருந்துவருகிறது.

இச் சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சம்பவம் நடந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டார் மேலும் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செய்தியாளர்நேசபிரபுமீதுநடத்தப்பட்ட தாக்குதல்,பத்திfரிகை சுதந்திரத்திற்குவிடப்பட்டஅச்சுறுத்தல்எனT.U.J.கருதுகிறது.
இந்த கொலை வெறிதாக்குதலுக்கு,கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன்.
பத்திரிகை,ஊடகவியலாளர்களின்மீது நடத் ப்படும்இதுபோன்ற தாக்குதல்கள்
இனியும் நடைபெறாத,உள்துறை இலாகா வை தனது கையில்வைத்துள்ள,தமிழ்
நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் காவல்துறைக்குஉரியஉத்தரவுபிறப்பித்து, மின்னல் வேகத்தில் குற்றவாளிகளைபிடித்து,உரியதண்டனை பெற்றுத்தர
நட டிக்கை எடுக்கவேண்டுமாய் T.U.J. வலியுறுத்திகேட்டுக்கொள்கிறது.முதல் அமைச்சர்எடுக்கும் நடவடிக்கை தான்,அச்சமின்றி பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்யஉறுதுணையாகஇருக்கும்.மகாராட்டிரா,
சத்தீஸ்கர் மாநிலங்களில்அமல்படுத்தப்படும், – “பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை” தமிழகத்திலும்அமல்படுத்திட வரும் 2024 ம் ஆண்டுநிதிநிலை அறிக்கையின் போது, உடனடியாக, ஒருவரைவு சட்டமுன்வடிவைகொண்டு வரவேண்டும் என,T.U.J. வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்த சட்டம் தான் பத்திரிகையாளர்களுக்கு,பெரும்பாதுகாப்புஅரண்என்றுT.U.J.உறுதியாக,நம்புகிறது.மேலும் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும்செய்தியாளர்நேச பிரபுவுக்கு,
உயர்சிகிச்சைஅளித்து, அவரதுஉயிரைபாதுகாக்கமுதல்வர்தலையிட்டு உதவிட கோருவதுடன்வயதான,அவரதுகுடும்பத்தாருக்கும் உரியநிதிஉதவி செய்திடவும் T.U.J.முதல் அமைச்சரை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் T.U.J. தலைவர்புருஷோத்தமன்கேட்டுக்கொண்டுள்ளார்….

Related Articles

Back to top button
Close
Close