fbpx
Others

கலெக்டர் முருகேஷ்—கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவுபரிசு.

ஆன்லைனில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். திருவண்ணாமலை ஆன்லைனில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்நிலை அலுவலர்களின் பணி முன்னேற்றம் குறித்துகிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவில் உள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான பணி முன்னேற்றம் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல், ஆன்லைன் சான்றுகள் முதல்- அமைச்சர் முகவரி துறை மூலம் பெறபட்ட மனுக்கள் மற்றும் பிரதம மந்திரி முகவரி துறை மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வேளாண் அடுக்கு ஆன்லைன் பதிவேற்ற விவரம் ஆகிய பணி முன்னேற்றம் குறித்து கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். நினைவு பரிசுகள் மேலும் வேளாண் அடுக்கு ஆன்லைன் பதிவேற்றத்தில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர்களது சிறப்பான பணியை பாராட்டி கலெக்டர் நினைவு பரிசினை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வீ.வெற்றிவேல் (பொது), தேன்மொழி (நிலம்), தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன், செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close