fbpx
Others

கர்நாடக பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி பேட்டி,

கர்நாடக பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-எதுவும் இல்லை தலித் மக்களை மேம்படுத்துவதாக காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் அந்த தலித் மக்களின்அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை; பா.ஜனதா குற்றச்சாட்டு முன்னேற்றத்திற்காக முந்தைய பா.ஜனதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 14 திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையை ரத்து செய்துள்ளனர். பாடத்திட்டத்தை மாற்றியுள்ளனர். விவசாயிகளின் குழந்தைகளுக்கான வித்யாஸ்ரீ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டனர். மாவட்டங்களில் கோசாலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. வேளாண் சந்தைகள் சட்டத்தை நீக்கியுள்ளனர். விவசாயம் செய்யாதவர்கள் விவசாய நிலம் வாங்க முந்தைய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியது. அந்த சட்டப்பிரிவை நீக்கிவிட்டனர். பால் கூட்டுறவு வங்கி அமைக்கும் முடிவை ரத்து செய்துள்ளனர். சித்தராமையாவின் பட்ஜெட்டில் எதுவும் இல்லை இலவச பஸ் பாஸ் கடந்த 2018-ம் ஆண்டு ஆட்சியை விட்டு காங்கிரஸ் விலகிய போது, மாநிலத்தின் மீது கடன் சுமையை ஏற்றிவிட்டு சென்றனர். நாங்கள் 25 ஆயிரம் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தோம். இன்னும் 30 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். அவர்களை பற்றி இந்த அரசு எதுவும் கூறவில்லை. 8 லட்சம் மாணவிகளுக்கு நாங்கள் இலவச பஸ் பாஸ் கொடுத்தோம். லம்பானி சமூக மக்கள் வசிக்கும் குக்கிராமங்களுக்கு வருவாய் கிராம அந்தஸ்து வழங்கினோம். அந்த மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கினோம். இதை காங்கிரஸ் செய்யவில்லை. சித்தராமையா பொய்கள் மூலம் ஆட்சிக்கு வந்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. அவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், இது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று சித்தராமையா சொல்கிறார். இவ்வாறு சலவாதி நாராயணசாமி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close