fbpx
Others

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார்மீதுபோலீசார்வழக்கு.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். அந்த வரிசையில் கடந்த மாதம் மார்ச் 29ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவகுமார், மண்டியா மாவட்டத்தில் உள்ளபெவினஹள்ளியில் ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார்.   அவரை உற்சாகமூட்டும் வகையில் காங்கிரஸார் மலர்களை தூவி வரவேற்றனர்.அப்போது மகிழ்ச்சி அடைந்த டி.கே.சிவகுமார் 500 ரூபாய் நோட்டுகளை மேளக் கலைஞர்கள் மீது வீசினார். தேர்தல் பிரச்சார வேனில் இருந்தபடி ரூபாய் நோட்டுகளை மக்களை நோக்கி வீசியுள்ளதாக தெரிகிறது.இதனால், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அவர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது .

Related Articles

Back to top button
Close
Close