கர்நாடக அரசின் SBI, PNB வங்கிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை..?


அதேபோல, கர்நாடகா தொழிற்பகுதி வளர்ச்சி வாரியம் பி.என்.பி-யில் 2011-ம் ஆண்டு ரூ.25 கோடி வைப்புத்தொகை வைத்திருந்தது. அந்த நிதியை வங்கி அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாநில அரசின் அதிகாரிகள், அந்த ரூ-25 கோடியில் ரூ.13 கோடியைத் திரும்பப் பெற்றுவிட்டார்கள். மீதித்தொகை அரசுக்கு கிடைக்கவில்லை.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், பலகோடிரூபாய்இன்னும்இந்தவங்கிகளிடமிருந்துபெறவேண்டியிருக்கிறது என்றும் கர்நாடகா அரசு கூறியிருக்கிறது. ஏற்கெனவே, பழங்குடி மக்களுக்கான கர்நாடகா மகரிஷி வால்மீகி வளர்ச்சிக் கழகத்தில் பழங்குடியினருக்கான நிதி முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று சித்தராமையா அரசு மீது பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ., பி.என்.பி விவகாரம் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
