Others
கராத்தே போட்டியில் தமிழ்நாட்டின் ஆவடிசேப்பா அகாடமி மாணவர்கள்வெற்றி..
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த தெற்காசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டின் ஆவடி சேப்பா அகாடமி மாணவர்கள் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்.கட்டா மற்றும் கும்மி தே பிரிவில் ஷர்மிளா தங்கம் மற்றும் வெங்கலம், ரியா தங்கம் மற்றும் வெங்கலம், ஜிவேஷ் வெள்ளி மற்றும் வெங்கலம் வென்றிருக்கிறார்கள்.இவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை பயிற்சியாளர்கள் எஸ். ராஜா, ஆர். சங்கீதா ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பெற்றோர்கள் மற்றும் சேப்பா அகடமி நிர்வாகிகள் பாராட்டினர்.