fbpx
Others

கம்பம்-இராயப்பன்பட்டி சண்முகாநதி நீர் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி : நவம்பர் :13 தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே இராயப்பன்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நீர்மட்டம் 52.50 அடி முழு கொள்ளவை எட்டியதை அடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க 11-11-2024ல் உத்தரவிட்டது அதனை அடுத்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் தலைமையில் சண்முகநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்குகாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன அதன்படி வினாடிக்கு 14.47 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி வவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த தண்ணீர் திறப்பால் 1640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் பெறுகின்றன அதன்படி இராயப்பன்பட்டி, மல் லிங்காபுரம், சின்ன ஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர் , கன்னி சேரவை பட்டி, அழகாபுரி,வெள்ளையம்மாள்புரம், ஒடைப்பட்டி ஆகிய பகுதிகள் பயன் பெறுகின்றன. இந்த நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் இன்பென்ட் ஜெப்ரினா மற்றும் இராயப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அரோக்கியசாமி (எ)பால்ராஜ் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனம் உதவி பொறியாளர் பிரேம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close