fbpx
Others

கன்னியாகுமரியில்பொதுமக்கள் பெருமளவில் குவிந்தனர்….,

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி இன்றும் சுற்றுலா தலங்களில்பொதுமக்கள் பெருமளவில் குவிந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாட்டு பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. பொங்கல் கொண்டாடடத்தின் 3 வது நாளான இன்று (17ம்தேதி) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆறுகள், கடற்கரைகளில் மக்கள் பெருமளவில் திரண்டனர்.முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நவம்பர் மாதத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த மாதமும் (ஜனவரி) தொடக்கத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்த வண்ணம் இருந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த இரு நாட்களாகவே கன்னியாகுமரி களை கட்டி இருந்தது. காணும் பொங்கலையொட்டி இன்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்திருந்தனர். இன்று அதிகாலை முக்கடல் சங்கம கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டுகளித்தனர். ெதாடர்ந்து கடலில் நீராடி பகவதியம்மனை தரிசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து திரும்பினர்.காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்துக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதே போல் திற்பரப்பு, காளிகேசம், லெமூரியா பீச், சொத்தவிளை, முட்டம் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்திருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close