fbpx
Others

கனிமொழி–புதிய நாடாளுமன்ற கட்டடம்பாதுகாப்பு குறைபாடு.

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் புதன்கிழமை வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்துள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் மிகவும் எளிதாக நுழைந்து இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்கிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த நபர்கள் தங்களின் காலணிக்குள் மறைத்து வைத்திருந்த வண்ண புகை கருவிகளை திடீரென எடுத்து வீசினர். நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது.மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகை தாக்குதல் நடத்தியவர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய மனோரஞ்சன் மைசூரை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதலால் நாடாளுமன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துமீறலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்துள்ள காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.விசாரணையில் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மக்களவையில் அத்துமீறியவர்களில் ஒருவரான மனோ ரஞ்சன் பொறியியல் பட்டதாரி. மணிப்பூர் விவகாரத்தில் நாட்டின் கவனத்தை ஈர்க்கவே வண்ணப் புகைகுண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல் அளித்துள்ளனர். முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவி குதித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றவர்களை எம்பிக்கள் மடக்கிப் பிடித்தனர். கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றபோது “பாரத் மாதா கீ ஜே” என்றும், “ஜெய் பாரத்”, “ஜெய் பீம்” என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமீட்டனர். பாரத் மாதா கீ ஜே, ஜெய் பீம், ஜெய் பாரத் என முழக்கமிட்டவாறு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அத்துமீறிய 4 பேரை கைது செய்தனர் கனிமொழி கண்டனம் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறிய 2 பேரை அவையில் இருந்த எம்.பி.க்கள் தடுத்தார்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அமைப்பே, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தெரிகிறது. அவைக்குள் எளிதாக ஊடுருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. புகையின் நெடி மக்களவை வளாகத்தில் பரவியது என்று கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பாதுகாப்பு குளறுபாடியால் நாடாளுமன்றத்தில் அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது. பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு? . நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நிச்சயமாக ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டும். பார்வையாளர் மாடத்தில் இருந்து எளிதில் அவைக்குள் நுழையும் வகையில் கட்டட வடிவமைப்பு உள்ளது

Related Articles

Back to top button
Close
Close