fbpx
Others

கடலூரில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிறைவு .

 கடலூர் மாவட்டத்தில் 10 நாட்களாக நடைபெற்ற வந்த பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. பொதுமக்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டம் வாரியாக புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தகக் கண்காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கியது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. தினமும் ஏராளமானோர் திரண்டு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில் நிறைவு நாளான நேற்றும் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். முன்னதாக புத்தக கண்காட்சியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக மாநில திட்ட குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜன் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. புத்தக திருவிழாவை பார்வையிடவும் புத்தகங்களை வாங்கவும் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close