fbpx
Others

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் இந்தியா உலக அரங்கில் கவனம் ஈர்க்கும்..

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின்கப்பல்கட்டும் தளம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள நவீன தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம்ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலான ‘சார்லஸ் ட்ரூ’ (Charles Drew) சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்துக்கு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிக்காக வந்தது.

கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையில் உலகின் வலிமை மிகுந்த நாடாக சீனா உருவெடுத்து வருகிற நிலையில், சீனாவின் அண்டை நாடான இந்தியாவுக்கு அமெரிக்க கப்பல் பழுதுபார்ப்புப் பணிக்காக வந்தது பெரும் கவனம் ஈர்த்தது.முக்கிய ஒப்பந்தம்: 2023-ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் – எல் அண்ட் டி நிறுவனத்துக்கும் இடையேமாஸ்டர் ஷிப்யார்ட் பழுதுபார்ப்பு ஒப்பந்தம் (எம்எஸ்ஆர்ஏ) கையெழுத்தானது. இதன்படி, அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் டி கப்பல் கட்டும்தளத்தில் 5 ஆண்டுகளுக்கு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க கடற்படை கப்பலான யுஎஸ்என்எஸ் சால்வார் சென்னை காட்டுப்பள்ளி தளத்துக்கு வந்தது.அதேபோல், பிரிட்டனுடனும் 2022-ல் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது பிரிட்டன் கப்பல்களான ‘ஆர்எப்ஏ அர்கஸ்’, ‘ஆர்எப்ஏ லைம் பே’ ஆகிய இரண்டு கப்பல்கள் பராமரிப்பு பணிக்காக சென்னை வந்துள்ளன. பிரிட்டனின் கடற்படைக் கப்பல்கள், இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது பார்க்கப்படுவது இதுவே முதல் முறை.– இந்தோ – பசிபிக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளை, ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதல் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிற நிலையில், அமெரிக்க மற்றும் பிரிட்டன்ஆகிய நாடுகள் இப்பகுதியில் கூடுதல்கப்பல்களை ரோந்து பணிக்கு கொண்டு வந்தபடி உள்ளன.இந்தக் கப்பல்களில் பழுது ஏற்பட்டால், சொந்த நாட்டுக்குச் சென்று பழுதுபார்ப்பது என்பது நேர விரயம் மட்டுமல்ல செலவு மிகுந்ததும் கூட. இதே பணியை இந்தியாவில் மேற்கொள்வது என்பது பல விதங்களில் வசதியானது. செலவும் குறைவு. இதனால், அந்நாடுகள் தங்கள் கப்பல்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிக்கு இந்தியாவை தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.இதற்குப் பின்னால் அரசியல் காரணமும் உண்டு. வலிமையான கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா,தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம்செலுத்தி வருகிறது. சீனாவும் ரஷ்யாவும் கூட்டாளிகள். அவ்விருநாடுகள் கடற்பரப்பில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது என்பது அமெரிக்காவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. இதனால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையையும் தொடர்ந்து வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது. தென் சீன கடல் பகுதிக்கு அருகே இந்தியா அமைந்துள்ளதால், இங்குள்ள கப்பல் கட்டும்தளங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அமெரிக்க தன் கடற்படை இருப்பை சீனாவுக்கு தொடர்ந்து உணர்த்திக்கொண்டிருக்க முடியும் என்று கூறுகின்றனர்.இந்தியாவுக்கு என்ன பலன்? – இந்தியா தனது தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்து இருப்பதைக் குறைப்பதோடு, உள்நாட்டு சேவைகளை, தயாரிப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது  .2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள கப்பல்கட்டுமானத் தளங்களைப் பற்றியும், அதை அமெரிக்க எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தும் பேசினார்.இந்நிலையில், மேற்குலக நாடுகள் தங்கள் கப்பல் பழுதுபார்ப்புக்கு இந்தியாவை தேர்வு செய்வது என்பது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.தவிர, இது சர்வதேச கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பில் இந்தியாவின் திறனை உலகுக்குக் காட்டுகிறது. மேலும், ராணுவ ரீதியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடனான உறவு மேம்படவும் இதுவழிசெய்கிறது. எல்லைப் பிரச்சினை சார்ந்து, சீனாஇந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்துலாக இருந்துவருகிறது. சீனாவை எதிர்கொள்ள இந்தியா தனது ராணுவக் கட்டமைப் பலப்படுத்தி வருகிறது. இந்தச்சூழலில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கடற்படைக் கப்பல்கள் இங்கு வருவதென்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.கரோனா காலகட்டத்தில் இந்தியா சொந்தமாக தடுப்பூசி உருவாக்கி அத்தனை கோடி மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. வளர்ந்த நாடுகள் மட்டுமே விண்வெளித் துறையில்கோலோச்சி வந்தநிலையில், இந்தியா மிகக் குறைந்த செலவில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி உலகை திரும்பிப்பார்க்க வைத்தது.அந்த வரிசையில் தற்போது கப்பல் துறை சார்ந்து இந்தியா உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது. இதன் வழியே, தமிழ்நாடும் முக்கியத்துவம் பெறுகிறது…

Related Articles

Back to top button
Close
Close