fbpx
Others

கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத நிதிஷ் குமார்….

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத, ஒரு காலத்தில் மோடியைNithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்? கடுமையாக எதிர்த்த.நிதிஷ் குமார் இன்று அதே மோடி மற்றும் பாஜகவின் ஆதரவுடன் 10 வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.நிதிஷ் குமாரின் அரசியல் பயணம் பெரும் ஆச்சர்யங்களையும் நேரெதிர் முரண்களையும் கொண்டது. மாணவப்ருவத்திலிருந்து தொடங்கிய அவரின் அரசியல் பயணத்தை அசைபோடுவதன் மூலம் இதை உணரமுடியும்.நிதிஷின்அரசியலைமுழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் அவரைக் கடந்துஇன்னும் சிலரின் பயணத்தையும் நாம் அறிந்தாக வேண்டும். அதில் முக்கியமானவர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். அதற்காகவே பலமுறை சிறைக்கும் சென்றவர். சுதந்திர இந்தியாவின் வரலாறில் கறுப்புப் பக்கமாக நிரம்பியிருக்கும் எமெர்ஜென்சியை இந்திரா காந்தி அமல்படுத்தியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது ஜெ.பிதான். 1970 களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தார்.இந்த சமயத்தில்தான் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வென்றதற்கு எதிராக ராஜ் நாராயண் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூன் 12, 1975 இல் தீர்ப்பு வெளியானது. ஜூன் 25 இல் இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஜெபி நடத்திய போராட்டமே. அரசுக்கு எதிராக தீவிரமான எதிர்ப்புணர்வு உருவாகியிருந்த இந்த நிலையில்தான் பீகாரை சார்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரும் ஜெபியால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். லாலு பிரசாத் எளிய பின்னணியை கொண்டவர்.1977-ல் அவசரநிலை முடிவுக்கு வருகிறது. தேர்தலில் வென்று ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கிறது. ஜனதாவுடன் கூட்டாக இருந்த பாரதிய ஜன சங்கத்தின் தொண்டர்களின் இரட்டை உரிமையை சரண் சிங் கேள்வி கேட்க, ஜனதாவின் கூடாரம் காலியாகி மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியைப் பிடித்தார். மத்தியில் ஜனதா கட்சி வீழ்ந்திருந்தாலும் அரசியல் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு லாலுவும் நிதிஷூம் பீகாரில் பரபரவென இயங்கினர். இருவருமே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகினர். ஆயினும், வசீகரமாக பேசக்கூடிய லாலுவின் கரமே பீகாரில்ஓங்கியிருந்தது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக லாலு பார்க்கப்பட்டார்.அந்தமக்களின்உரிமைகளையும்சுயமரியாதையையும்பாதுகாப்பதேதன்னுடையநோக்கமெனலாலுமுழங்கினார்.லாலுவுக்குமக்கள்செல்வாக்குஅதிகரித்ததுஇதனால் குர்மி இனத்தைச் சேர்ந்த நிதிஷ் இயல்பிலேயே லாலுவை விட்டு விலகி நிற்க வேண்டிய தேவையும் எழுந்தது. மாநில அளவில் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்கிற புதிய கட்சியை லாலு தொடங்கினார். லாலு தனியாகவிலகிசென்றதால்நிதிஷ்குமார்மீண்டும்ஜனதாகட்சியைநோக்கிநகர்ந்தார்.தனதுசமதாகட்சியைஜனதாகட்சியுடன்இணைத்துஐக்கியஜனதாதளம்எனபெயரைமாற்றினார்.1990முதல்2005வரைக்குமேபீகார்லாலுவின்கட்டுப்பாட்டில்தான்இருந்தது.நம்பிக்கையில்லா Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்?தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே நிதிஷ் ராஜினாமா செய்தார். இந்த 15 ஆண்டு காலத்தில் நிதிஷ் குமார் மத்திய அமைச்சரவைகளில் விவசாயத் துறை அமைச்சராகவும்ரயில்வேதுறைஅமைச்சராகவும்பொறுப்புவகித்திருந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது மந்திரி பதவியையே நிதிஷ் ராஜினாமா செய்தார். சமீபத்தில், ஒடிசாவில் ரயில் விபத்து நடந்து பல பேர் பலியான சமயத்தில் நிதிஷ் குமார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் தன்னைப்போலவே தற்போதைய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பதவி விலக வேண்டும் என காட்டமாக கூறினார் என்பதும் கூடுதல் தகவல்.

Related Articles

Back to top button
Close
Close