fbpx
Others

கடந்த 2 நாட்களில் 23 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் .

கடந்த 2நாட்களில்23மாடுகள்பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிஅபராதம்விதித்துள்ளது.பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில்மாடுகளை சாலைகளில் தன்னிச்சையாக விடுவதன் மூலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதோடு மக்களைத் தாக்கி விபத்தும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.இதனைத் தவிர்க்கின்ற வகையில் பெருநகர சென்னை மாகநகராட்சி சார்பில் உரிய சட்ட விதிகளின்படி தன்னிச்சையாக நடமாடும் மாட்டின் உரிமையாளர்கள்மீதுஅபராதம்விதித்துஉரியநடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது. எனினும், சாலையில் தொடர்ந்து நடமாடும் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்பட்டு காயமடையும் சூழல் ஏற்படுகிறது. இதனைத் தடுத்திடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களால் கள ஆய்வு மேற்கொண்டு மாடுகளைப் பிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி, அனைத்து மண்டலங்களிலும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 23 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்குஅபராதம்விதிக்கபட்டுள்ளது.இதுவரைபெருநகரசென்னைமாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3859 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சி ஊழியர்களால் இன்று பிடிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close