fbpx
Others

கடந்த நிதி ஆண்டில் நகைகள் உட்பட ரூ.170 கோடி சொத்து பறிமுதல்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், வருமான வரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குநருமான (புலனாய்வு)சுனில் மாத்தூர்பேசியதாவது: அறிவியல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் வியத்தகு முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவும், பொருளாதாரத்தில் உலகின் 5-வது பெரியநாடாகவும் இந்தியா கருதப்படுகிறது.ரூ.33.60 லட்சம் கோடி இலக்கு: நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான உதவியை வழங்குவதில் வருமான வரித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த வரி வசூலில் 54 சதவீதம், வருமான வரித் துறையின் பங்களிப்பு ஆகும். 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் மொத்த வரி வருவாய் இலக்கு ரூ.33.60 லட்சம் கோடியாகவும், இதில் நேரடி வரி வசூல் ரூ.18.30 லட்சம் கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்புநடவடிக்கைகளையும் வருமான வரித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நேர்மையாக வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் புலனாய்வு பிரிவு 2022-23-ம் நிதி ஆண்டில் 81 சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.இதில் ரூ.120 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் என ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில், கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானமும் கண்டறியப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில், நேரடி வரிவிதிப்பு துறையில் சிறந்துவிளங்கியதற்காக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையரின் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close