fbpx
Others

கஞ்சா வழக்கில் 7 குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்சிறை & 1,00,000/- அபராதம்.

தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சிலைமணி  தலைமையில் சார்பு ஆய்வாளர்கள், திவான்மைதின், வினோத்ராஜா ஆகியோர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையின் போது நான்கு சக்கர வாகனத்தில் 1.சுகப்பிரியா, 2.முத்துசெல்வம், 3.சந்தோஷ், 4.சுவாதி, 5.ஈஸ்வரி, 6.செல்லகாளி, 7.ஜெயக்குமார், ஆகிய 7 நபர்கள் 180 கிலோ கஞ்சா கடத்தி வந்ததையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து 7 நபர்களை கைது செய்து மதுரை மாவட்ட முதன்மை EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்ற நீதிபதி .A.S.ஹரிஹரகுமார்,B.L.,அவர்கள்  ஏழு நபர்களும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 7 நபர்களுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1,00,000/- ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார்.  கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் .சிலைமணி  தலைமையிலான காவல்துறையினருக்கும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.R.சிவபிரசாத்,இ.கா.ப.,  தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close