fbpx
Others

ஓவர் நைட்டில்களத்தில் இறங்கிய காவல்துறை–400 பேர் சிக்கினர்

சென்னை: குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 400க்கும் அதிகமானோரை சென்னை காவல்துறையினர் ஒரே நாளில் சுற்று வளைத்து பிடித்துள்ளனர்சென்னையில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள் குறித்து தொடர் புகார்கள் வந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க ‘ஸ்பெஷல் ஆப்ரேஷன்’ நடத்தப்பட்டுள்ளது.மெரினா பீச், அண்ணா நகர் டவர் பார்க்,ஸ்பெஷல் ஆப்ரேஷன் சேத்துப்பட்டு லேக், அப்புறம் சில தியேட்டர்கள் மட்டுமே சென்னை கிடையது. எந்த ஒரு நகரத்தின் உண்மை முகத்தையும் இரவில்தான் நம்மால் பார்க்க முடியும். சென்னையில் இரவில் சுதந்திரமாக செல்போன் பேசிக்கொண்டு ரோட்டில் நடமாட முடியாது, தங்க செயின் அணிந்து கொண்டு புறநகர் பகுதியில் செல்ல முடியாது என பல கட்டுப்பாடுகளை சமூக விரோதிகள் செயற்கையாக உருவாக்கி வைத்துள்ளனர். ஸ்பெஷல் ஆப்ரேஷன் சமீப நாட்களாக இவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், சென்னை பெருநகர காவல்துறையினருக்கு இது தலைவலியை ஏற்படுத்தியது. இது குறித்த புகார்களும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து காவல்துறை ‘ஸ்பெஷல் ஆப்ரேஷன்’ ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டது. இந்த திட்டத்தை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்தார். அதாவது ஒரே நாளில் இந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடிப்பதுதான் அது. ஆனால் இது யாருக்கும் தெரியாது. 403 குற்றவாளிகள் நேற்று காலை ஷ்டேசன் வந்தபோதுதான் இது குறித்து அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வீடு புகுந்து திருடுதல், செல்போன் பறிப்பு, தங்க செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் குறி வைக்கப்பட்டனர். இதில் சுமார் 403 குற்றவாளிகள் பிடிபட்டனர். இதில் அதிகப்பட்சமாக கிழக்கு மண்டலத்தில் 167 பேரும், வடக்கு மண்டலத்தில் 148 பேரும், தெற்கு மற்றும், மேற்கு மண்டலங்களில் தலா 141,107 குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனர் இவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 29 குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த ஆப்ரேஷனில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், குற்ற செயல்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தவர்களில் பத்து பேர் இந்த ஆப்ரேஷன் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் அது.

Related Articles

Back to top button
Close
Close