fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு – ராதாகிருஷ்ணன்

சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் கடந்த 3-ஆம் தேதி இரத்தம் செலுத்தப்பட்டது. ஆனால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய குறைவால் எச்.ஐ.வி-யால் பாதித்த இரத்தம் செலுத்தப்பட்டது.

 

இவ்வாறு செலுத்தப்பட்ட இந்த இரத்தம் ஏற்கனவே சிவகாசி மருத்துவமனைக்கு வந்த வாலிபர் , அங்கு அப்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த தன் உறவினர் பெண்ணிற்கு ரத்தம் தேவைப்பட்டதால் இரத்த தானம் செய்திருந்தார்.அதன் பின் அவர் வெளிநாடு செல்வதற்காக மீண்டும் மதுரைக்கு வந்து இரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது என்பது தெரியவந்தது. அதனால் தன்னுடைய இரத்தத்தை அந்த பெண்ணிற்கு செலுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தான் கொடுத்த எச்.ஐ.வி கிருமி கலந்த இரத்தத்தை தன்னுடைய உறவினர் பெண்ணிற்கு ஏற்றவில்லை என்று தெரிவித்த மருத்துவஊழியர், அந்த இரத்தம் சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுப்பற்றி சாத்தூர் மருத்துவமனைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதற்குமுன்னதாகவே ஆட்டோ டிரைவரின் கர்ப்பிணி மனைவிக்கு ஏற்றப்பட்டதில் , அவருக்கு தொடர் வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படவே அதன் பின் அவருக்கு இரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சாத்தூர் வாலிபர் இரத்ததானம் செய்வதற்கு முன் அவருக்கு இரத்த பரிசோதனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. அதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14 இரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எச்.ஐ.வி கிருமி நிறைந்த இரத்தம் செலுத்தப்பட்ட அந்த கர்பிணி பெண்ணிற்கு வீட்டிலேயே வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அந்த பாதிப்பு ஏற்படாத வண்ணம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் சிவகாசி அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி ஒப்பந்த தொழில்நுட்பவியலாளர் வளர்மதி மீது நடநடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் சென்ற சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார். பின் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அந்த அரசு மருத்துமனையிலேயே ஓட்டுநர் பணி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close