fbpx
Others

‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’

‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ (ITUJ) – 2025 ஆம் ஆண்டிற்கான 250 பத்திரிகையாளர்க்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கம் விழா மற்றும் பிப்ரவரி மாதாந்திர கூட்டம்.அன்பான தோழர்களே வணக்கம்.’ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ (ITUJ) – வின் 2025 ஆம் ஆண்டிற்கான 250 பத்திரிகையாளர்க்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கம் விழா நடைப்பெறவுள்ளது.நாள் : 09.02.2025 ஞாயிற்றுக் கிழமைநேரம் : மாலை 03.00 மணி முதல் 6.00 மணி வரைஇடம்: YWCA Hall- வேப்பேரி, பூவிருந்தமல்லி சாலை, சென்னை-7.(No. 6/74, Y.W.C.A. Building, Ritherdon Road, Vepery, Chennai – 600007)என்ற முகவரியில் மாநில தலைவர் திரு. P. சண்முகவேல் அவர்களின் தலைமையிலும், பொருளாளர் திரு. பஞ்சநதம், துணைத் தலைவர் திரு. கி. மணிவாசகம், பொதுசெயலாளர் திரு. ரவிசந்திரஹாசன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், சென்னையில் உள்ள மாநில நிர்வாகிகள், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பிற மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.கூட்டம் குறித்த நேரத்தில், துவங்கி உரிய நேரத்தில் முடிவடைய இருப்பதால், சரியான நேரத்தில் பங்கேற்று, விழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்விழாவில்….1) 250 பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.2) நடைபெற்றுள்ள வேலைகள் குறித்து பரிசீலனை.  3) 2025 ம்ஆண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விவாதம் .4) பத்திரிகையாளர்கள், அவர்களின் குடும்பத்தாரின் நலன்கள் குறித்து திட்டமிடுதல், 5) “சென்னை அண்ணாபல்கலைக்கழகமாணவிவன்புணர்வுக்கொடுமைக்கு”வழக்கில்தந்திதொலைக்காட்சியின் செய்தியாளர் சசிதரன், புதிய தலைமுறையின் செய்தியாளர் அன்பரசன், ஒன் இந்தியா செய்தியாளர் நெல்சன் சேவியர் ஆகியோரிடம் கருவிகள் பறிமுதல் செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து முதலமைச்சரை நேரில் சென்று மனுகொடுத்தல்..6) கூட்டத்தலைவர் அனுமதியுடன் இதரவிசயங்கள் பற்றி பேசி சங்கத்தை வலுபடுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்குவது.எனவே, குறிப்பிடப்பட்ட அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுமென, அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!மு.க.ரவிசந்திரஹாசன்பொதுச் செயலாளர் – ITUJ’ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்(தவிர்க்க முடியாக காரணத்தினால் விழாவில் கலந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு கொரியரில் அடையாள அட்டை அனுப்பப்படும்)

Related Articles

Back to top button
Close
Close