fbpx
Others

ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யகொலிஜியம்பரிந்துரைத்திருந்தது.இந்தபரிந்துரையைஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி சமீபத்தில்உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்கிறது. காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது.  1968ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பிறந்த விவேக் குமார் சிங் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிறந்த மம்மினேனி சுதீர் குமார் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யபட்ட 2 நீதிபதிகள் இன்று மாலை பதவியேற்கின்றனர். அலகாபாத ஐகோர்ட் நீதிபதியாக இருந்த விவேக்குமார் சிங்க், தெலுங்கானா ஐகோர்ட் நீத்பதியாக இருந்த சுதீர்குமார் இடமாற்றம் செய்யபட்டனர். நீதிபதிகள் விவேக் குமார் சிங், சுதீர்குமாருக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close